டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்த மதுரயைச் சேர்ந்த 35 பேரை சுகாதாரத் துறை கண்டறிந்து அவர்களை தோப்பூர் சிறப்பு வார்டில் தங்கவைத்து கண்காணித்து வந்தது.
14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பரிசோதனையில், 27 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்றும், 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி என்றும் முடிவுகள் வந்தன. இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரை மதுரை அரசு இராசாசி மருத்துவமனையிலேயே கண்காணிப்பில் வைத்தனர்.
தொடர்ந்து கரோனா தொற்று இல்லாத 27 பேரை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் - உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு!