மதுரை மாவட்டம் நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 69ஆவது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டியை இக்கல்லூரியின் தலைவர் கரிக்கோல்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், 70 ஆடவர் அணிகளும், 40 மகளிர் அணிகளும் என மொத்தம் 110 அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டியில் தமிழ்நாடு ரயில்வே அணி, வங்கிகள் அணி, காவல்துறை அணி உள்ளிட்ட பல முக்கிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், மகளிர் அணிகளுக்கான இறுதிப் போட்டி நாளையும், ஆடவர் அணிகளுக்கான இறுதிப் போட்டி டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.