ETV Bharat / state

தறிகெட்டு ஓடி 4 பேரின் உயிரைக் காவு வாங்கிய தனியார் சொகுசுப் பேருந்து! - accident, 4 died

மதுரை: மதுரை அருகே அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி  பெண் போக்குவரத்துக் காவலர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

விபத்தில் 4 பேர் பலி
author img

By

Published : May 9, 2019, 11:39 AM IST

திருமங்கலத்தில் இருந்து சென்னையை நோக்கி தனியார் சொகுசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அருகே டிபிகே பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, ரோட்டை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த தல்லாகுளம் போக்குவரத்துக் காவலர் ஜோதி மற்றும் அவருடைய உறவினர் சத்தியவாணி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தியவாணியின் 15 வயது மகள் படுகாயமடைந்தார்.

அதேபோல் சாலையின் மறுபக்கம் சாலையை கடப்பதற்காக காத்திருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன், அவரது நண்பர் விக்கி மீதும் தனியார் சொகுசு பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் ஆனந்தன் உயிரிழந்தார். காயமடைந்த நிக்கி மற்றும் சத்தியவாணியின் 15 வயது மகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சை பலனின்றி 15 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் நள்ளிரவில் சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசுப் பேருந்தால் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
09.05.2019

*மதுரையில் அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி  பெண் போக்குவரத்துக் காவலர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலி - படுகாயங்களுடன் பெண் உட்பட இருவர் மருத்துவமனையில்அனுமதி*

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி  அருகே டிபிகே பாலத்தில் அதிவேமாக திருமங்கலத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து வந்துள்ளது,

அப்போது சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தல்லாகுளம் போக்குவரத்துக் காவலர் ஜோதி மற்றும் அவருடைய உறவினர் சத்தியவாணி இருவர் மீது பேருந்து மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்,

அதேபோல் சாலையின் மறுபக்கம் சாலையை கடப்பதற்காக காத்திருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மீது மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்,

மேலும்,படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தனின் நண்பன் விக்கி மற்றும் சத்தியவாணியின் 15 வயது மகள்  இருவரையும் மீட்டு காவல் துறையினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர், பின்னர் சிகிச்சை பலனின்றி 15 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்ததார்.

மதுரையில் நள்ளிரவில் சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசுப் பேருந்தால் இருவேறு இரு சக்கர வாகனங்களில் வந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

இந்த கோர விபத்து தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் ஓட்டுனரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_09_MDU ACCEDED NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.