மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல கோபுரம் பகுதியில் குட்கா விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடைபெற்ற சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (52), சையது மீரான் (40), மதார் மைதீன்(39) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 385 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திலகர் திடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் 385 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது - குட்கா விற்பனை செய்தவர்கள் கைது
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே 385 கிலோ குட்கா காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.