மதுரை: கடந்த 2022 ஜனவரி மாதம் பாண்டிகோயிலில் அறக்கட்டளை அலுவலகத்தில் தட்டுப்பணம் 3 லட்ச ரூபாய் திருடப்பட்டது. இது தொடர்பாக செல்லப்பாண்டி பூசாரி, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் லெட்சுமி, ரெபெல்லோ, ராஜேஷ்பாண்டி, பாண்டியராஜன், ரிஷிபாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 5 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, பாண்டிகோயில் தொடர்பாக இரு தரப்பு இடையே பிரச்சினை உள்ளது. உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றம் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ரெபெல்லோவும் அவரது முறை வந்த போது பூசாரியாக கோயிலில் இருந்துள்ளார். அப்போது தட்டில் விழுந்த பணம்தான் அந்தப்பணம் என்று கூறியுள்ளார். மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் : . மனுதாரர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், நிபந்தனைகளை மீறினால் கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்" எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோயில் பூட்டை உடைத்து பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு