ETV Bharat / state

தென் மாவட்ட காவல் துறையில் 15 பேர் மத்திய அரசின் விருதுக்குத் தேர்வு

மதுரை: தென் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 15 பேர் சிறந்த காவலர்களுக்கான மத்திய அரசின் விருதை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

south dist police central govt award
தென் மாவட்ட காவல்துறையில் 15 பேர் மத்திய அரசின் விருதுக்குத் தேர்வு
author img

By

Published : Nov 17, 2020, 2:51 AM IST

காவல் துறையில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கு மத்திய அரசு 'அதி- உத்கிருஷ்ட சேவா, உத்கிருஷ்ட சேவா படக்’ ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. சி.எஸ்.எஃப்., சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது முதன்முறையாக தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் பணி, அர்ப்பணிப்பு, புலனாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி 18 முதல் 25ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள காவலர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

மதுரை நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திருமலைக்குமார், மதுரை நகர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலா, சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், திண்டுக்கல் உளவுத்துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மேக்னாபுரம் காவல் நிலைய எஸ்ஐ பச்சைம்மாள், மதுரை வாலாந்தூர் காவல் நிலைய எஸ்ஐ அருண்குமார், நெல்லை நகர் காவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ உலகம்மாள், விருதுநகர் தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ ராஜபாண்டியன் ஆகியோர் 18 ஆண்டுகளில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணி புரிந்து, ‘ உத்கிருஷ்ட சேவா படக் ’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எந்தவித குற்றச்சாட்டுக்கும் இடமின்றி 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் மோகன்குமார், முத்துராமலிங்கம், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எஸ்ஐ நாகராஜன், சிவகங்கை ஆயுதப்படை எஸ்ஐ என். ஜெயேந்திரன் (தற்போது மானாமதுரை டிஎஸ்பி அலுவலகத்தில் பணி) நாகர்கோவில் சிறப்பு எஸ்ஐ முருகேசன், ராமநாதபுரம் சிறப்பு எஸ்ஐ அர்ச்சுனன் ஆகியோர் ‘ அதி- உத்கிருஷ்ட சேவா படக் ’விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 40 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என, 274 பேர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் மத்திய அரசின் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய அரசு விருது வென்ற விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.