மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி பெருமாள்பட்டியில் வசிப்பவர் பாண்டியன். இவர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தனது தோட்டத்தில் முருங்கை, மற்றும் கப்பக்கிழங்கு, சாகுபடி செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, கப்பக்கிழங்கு செடிக்குள் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மலைப்பாம்பை பிடித்த இளைஞர்கள்
இதைத்தொடர்ந்து பாம்பு இருப்பது பற்றி பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் தகவல் அறிந்த நிலையில், அவர்கள் ஒன்று சேர்ந்து பாண்டியன் தோட்டத்தில் படுத்து இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். சுமார் 13 அடி நீளம் இருந்த அந்த மலைப்பாம்பை இளைஞர்கள் உசிலம்பட்டி வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதனை உயிருடன் பெற்றுக்கொண்ட வனத்துறை அலுவலர்கள், அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிட்டனர்.
இதையும் படிங்க: குப்பையில் கிடந்த பொருட்களை சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு