ETV Bharat / state

மதுரையில் மட்டும் 100 கோடி ரூபாய் கல்விக் கடன் - சு.வெங்கடேசன் - மதுரையில் மட்டும் 100 கோடி ரூபாய் கல்விக் கடன்

மதுரையின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக 100 கோடி ரூபாய் கல்விக்கடன் தரப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் பேட்டி
சு.வெங்கடேசன் பேட்டி
author img

By

Published : Jan 18, 2022, 10:44 PM IST

மதுரை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஜனவரி 18) செய்தியாளர்களைs சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'மதுரையின் நலனுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமான குறிப்பிடத்தக்க முயற்சி மதுரையில் பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் பெற்றுத்தரும் முயற்சி ஆகும்.

மதுரையில் எந்த ஒரு மாணவருக்கும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர் கல்வி வாய்ப்பு பறிபோய் விடக்கூடாது என்கிற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.

சு.வெங்கடேசன் பேட்டி

பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் கல்விக்கடன் தருதல் 2020-21ஆம் ஆண்டில் 54 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், மதுரை மாவட்டத்தில் பல மடங்கு உயர்ந்து 100 கோடி ரூபாய் கல்விக்கடன் தரப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் 25ஆம் தேதி இவ்வியக்கத்தை மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகப் பணியாளர்களோடு முன்னெடுத்தோம்.

மதுரையில் உள்ள 357 மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்விக்கடன் பெறுதல் பற்றி விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. அக்டோபர் 20ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தினோம்.

1,355 மாணவர்கள் பதிவு செய்தனர். அன்றைய நாளிலேயே 11.81 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த அனைவரின் மனுக்களையும் முறையாகப் பரிசீலித்து கடன் வழங்கியதில் ரூ.100 கோடி என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதுவரை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1,095 மாணவர்களுக்கு 99.29 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளது.

12 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடி ரூபாயும், 28 தனியார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதில் மிக அதிகமாக கனரா வங்கி 38.21 கோடி ரூபாயையும், பாரத ஸ்டேட் வங்கி 27.89 கோடி ரூபாயையும் கல்விக்கடனாக வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

இவ்விலக்கினை அடைய கடந்த ஆறு மாதங்களாக உழைத்திட்ட மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகங்கள் குறிப்பாக முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக ஊழியர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 'காசு, புகழ வைச்சு என்ன பண்ண?' - வருத்தத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.