ETV Bharat / state

பத்தில் ஒருவருக்குத் தான் தற்போது 100 நாள் வேலை கிடைக்கிறது - மாணிக்கம் தாகூர்! - ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

மதுரை: நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் தற்போது பத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கிறது என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

பத்தில் ஒருவருக்கு தான் தற்போது 100 நாள் வேலை கிடைக்கிறது -மாணிக்கம் தாகூர்

author img

By

Published : May 14, 2020, 7:34 PM IST

விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் திருமங்கலம் பகுதியில் உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், “பத்தில் ஒருவருக்கு தான் தற்போது 100 நாள் வேலை கிடைத்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ரூ.151 சம்பளமாக வழங்கப்படுகிறது. ரூ.200 கொடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கொடுத்து அறிக்கைக்கும், தற்போது இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இடையே சமூக இடைவெளி இருக்கிறது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது, 200 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட வேண்டும். மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரையில், 2010ஆம் ஆண்டு புதிய விமான நிலையம் கட்டப்பட்டு, 2012இல் சரக்கு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு எந்த ஒரு வளர்ச்சியும் அடையாமல் இருந்துவருகிறது.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மதுரை விமான நிலையம் குறித்து கேள்விகள் எழுப்பிவருகிறேன். பாஜக மோடியின் அரசு மதுரையை வஞ்சிக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. பசி இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறுவது வருத்தத்துக்குரிய விஷயமாக இருக்கிறது. தினக் கூலி வேலை செய்பவர்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு அரசும் சேர்ந்து கொடுத்து இருக்கின்ற பணம் என்பது மாதத்திற்கு ரூ.1500, எந்த ஒரு குடும்பமும் இந்த தொகையை வைத்து வாழ முடியாது. இந்த நிலை மாற வேண்டும் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 7500 வழங்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினுடைய கோரிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...என்எல்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.