கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் நேற்று (பிப். 16) எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவைக் காண சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது, சீறிப் பாய்ந்த காளைகளில் ஒன்று பாதையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்ற இளைஞரைத் தூக்கி வீசிச் சென்றது.
மாடு முட்டியதில் இளைஞர் சுருண்டுவிழுந்தார். இதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பெற்றுவந்தவர் உயிரிழந்தார். இதனிடையே மாடு முட்டி இளைஞர் சுருண்டுவிழும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கள் இறக்குவோம்; முடிந்தால் தடுத்து பார்க்கட்டும்!