ETV Bharat / state

தம்பி மரணத்தில் நீடிக்கும் மர்மம் - அண்ணனிடம் போலீசார் விசாரணை

author img

By

Published : Dec 11, 2019, 11:33 PM IST

Updated : Dec 11, 2019, 11:47 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர், அடுத்த உத்தனப்பள்ளி அருகே, கூலித்தொழிலாளி சந்தேகத்துக்குரிய முறையில் இறந்தது தொடர்பாக, அவரது அண்ணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

mystery murder
mystery murder

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பென்னிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பசவன் (47). இவரது தம்பி முனி கிருஷ்ணன் (35). அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு தகராறு ஏற்படவே, காயமடைந்த முனி கிருஷ்ணன், கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றார்.

மரணத்தில் நீடிக்கும் மர்மம்

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து, மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை திடீரென முனிகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். முனி கிருஷ்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி காவல் துறையினர் இறந்தவரின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பசவன் மற்றும் முனி கிருஷ்ணனுக்குமிடையே தகராறு ஏற்படும் போதும், முனி கிருஷ்ணன் உடலில் கத்தி வெட்டு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் இறந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால், அண்ணன் பசவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ' குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும்...' - மத்திய அரசை எச்சரித்த மாணவர்கள் !

Intro:ஓசூர், அடுத்த உத்தனப்பள்ளி அருகே, கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, அவரது அண்ணனிடம் போலீசார் விசாரணை.Body:ஓசூர், அடுத்த உத்தனப்பள்ளி அருகே, கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, அவரது அண்ணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பென்னிக்கல் பகுதியை சேர்ந்தவர் பசவன், 47. இவரது தம்பி முனிகிருஷ்ணன், 35. கூலித்தொழிலாளர்கள்; இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு தகராறு ஏற்படவே, காயமடைந்த முனிகிருஷ்ணன், கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென முனிகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

இறப்பில் சந்தேகம் இருப்பதாக தகவல் வெளியானதால், உத்தனப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பசவன் மற்றும் முனிகிருஷ்ணன் இடையே தகராறு ஏற்படும் போதும், முனிகிருஷ்ணன் உடலில் கத்தி வெட்டு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் இறந்திருக்கலாம் எனவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், பசவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரோத பரிசோதனை அறிக்கை வந்த பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.Conclusion:
Last Updated : Dec 11, 2019, 11:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.