ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர் படுகொலை! பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: ஆவல்நத்தம் அருகே டாஸ்மாக் ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

கிருஷ்ணகிரி
author img

By

Published : Aug 17, 2019, 2:23 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவல்நத்தம் கூட்ரோடு சாலையில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றிவந்த ராஜா என்பவர், கடந்த 14ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், கரூர், திருவாரூர், தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ராஜாவின் மனைவிக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Intro:டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் : ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்Body:
தூத்துக்குடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜா என்பவரை சமூக விரோதிகள் கடைக்குள் வைத்து படுகொலை செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொமுச, பாரதீய மஸ்த்தூர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டியும் இதுவரை நடந்த கொள்ளை கொலை ஆகியவற்றுக்கு நீதி விசாரணை நடத்தக்கோரியும் விற்பனை ஆகும் பணத்தை சென்னை மண்டலத்தைப் போல் இரவு 8 மணிக்குள் வசூல் செய்ய வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு எங்களுக்கு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 138 டாஸ்மாக் கடைகளும் இன்று ஒருநாள் அடைக்கப்பட்டன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.