ETV Bharat / state

'மது போதை ஆசிரியரால் பறிபோன வெற்றி' - கிருஷ்ணகிரி மாணவர்கள் குமுறல்! - School

கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் மது அருந்த சென்றதால் வட்டார அளவிலான போட்டியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PET master
author img

By

Published : Aug 22, 2019, 11:38 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்துகொண்டனர். கபடி, கைப்பந்து, கோ-கோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் தலைமையில், 38 மாணவர்கள் மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து விளையாடினர். கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் சிங்காரப்பேட்டை மாணவர்கள் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து மாலை 3 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிங்காரப்பேட்டை உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் மதிய உணவிற்காக கடைக்குச் செல்வதாக மாணவர்களிடையே கூறிவிட்டுச் சென்றுள்ளார். 3 மணி வரை ஆசிரியர் காசிலிங்கம் மைதானத்திற்கு வரவில்லை. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிக்கு சிங்காரப்பேட்டை மாணவர்களை அழைத்தபோது, உடற்கல்வி ஆசிரியர் இல்லாத காரணத்தால் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து எதிர்தரப்பு அணி மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த பள்ளி வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணியளவில் தள்ளாடியபடி மதுபோதையில் வந்த உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என மிரட்டி அவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றினார். இதுகுறித்து ஆசிரியர் காசிலிங்கத்திடம் கேட்டபோது, வெளியே போக வேண்டுமென எதிர்பார்ப்பதாக, செய்திகளை போடுங்கள் என மிரட்டும் தொனியில் பேசிச் சென்றார்.

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் காசிலிங்கம் பற்றி மாவட்ட உடற்கல்வி அலுவலர் வளர்மதியின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், இது தொடர்பாக நேரில் விசாரணை மேற்கொண்டு, அதன்பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உடற்கல்வி ஆசிரியரின் செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் போதை பிஇடி ஆசிரியரால் பறி போன வெற்றி – விரக்தியில் சிங்காரப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் – மத்தூர் அரசு பள்ளியில் நடந்த வட்டார அளவிளான போட்டியில் புதிய சம்பவம்
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் போதை பிஇடி ஆசிரியரால் பறி போன வெற்றி – விரக்தியில் சிங்காரப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் – மத்தூர் அரசு பள்ளியில் நடந்த வட்டார அளவிளான போட்டியில் புதிய சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வட்டார அளவிளான விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட 10ற்கும் மேபட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். கபாடி, வாலிபால், கோ.கோ. ஆகிய விளையாட்டுகள் நடைபெற்றன.

இந்நிலையில் சிங்காரப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியிலிருந்து கபாடி மாணவர்கள் 12 பேரும், வாலிபால் மாணவர்கள் 12 பேரும், கபாடி மாணவர்கள் 14 பேரும் வந்திருந்தனர். இவர்களை சிங்காரப்பேட்டை உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் அழைத்து வந்திருந்தார்.

காலை துவங்கிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. வாலிபால் விளையாட்டு போட்டியில் சிங்காரப்பேட்டை மாணவர்கள் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று வந்தனர். இறுதிச்சுற்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சிங்காரப்பேட்டை உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் மதிய உணவிற்காக கடைக்கு செல்வதாக மாணவர்களிடையே கூறிவிட்டு சென்றுள்ளார். 3 மணிக்கு விளையாட்டு போட்டிக்கு சிங்காரப்பேட்டை மாணவர்களை அழைத்தபோது, உடற்கல்வி ஆசிரியர் இல்லாத காரணத்தால் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் விளையாட்டிலிருந்து விலக்குவதாக அறிவிக்கப்பட்டு எதிர் தரப்பு விளையாட்டு மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மாலை 4 மணியளவில் தள்ளாடியபடி மதுபோதையில் வந்த உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என மிரட்டி அவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்பினார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை உடற்கல்வி ஆசிரியர் காசிலிங்கம் அவர்களிடம் கேட்டபோது, வெளியே போக வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், செய்திகளை போடுங்கள் என மிரட்டும் தொனியில் பேசினார்.

இதுகுறித்து மாவட்ட உடற்கல்வி அலுவலர் வளர்மதி அவர்களிடம் கேட்டபோது, நேரில் விசாரணை மேற்கொண்டு, அதன்பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.