உலகம் முமழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தற்போது வரை தமிழ்நாட்டில் மூன்றாவது நிலையை எட்டவில்லை. அதற்கான முன்னெச்சரிக்கையாக நோய்த் தொற்றை இரண்டாவது நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடாத வண்ணம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கூடி வாங்கும் நிலையை மாற்ற, உழவர் சந்தைகளை அதிகரித்து பொதுமக்கள் ஒன்று கூடல்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், ஓசூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறிகளை விநியோகம் செய்யும் வகையில் 10 நடமாடும் காய்கறி வாகனங்களை மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: ‘கரோனாவை விரட்ட ஒத்துழையுங்கள்’ - கிருஷ்ணகிரி எஸ்.பி.