ETV Bharat / state

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவிகள் மரணம்!

கிருஷ்ணகிரி: வரட்டணபள்ளி அருகே உள்ள தாண்டவப்பள்ளம் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

students death
author img

By

Published : Sep 25, 2019, 11:56 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமட்டாரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் காவ்யா 9 ,சுபித்ரா 14 ஆகிய மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று மதியம்
தாண்டவப்பள்ளம் அருகே உள்ள குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் விளையாடும் பகுதியில் குடிமராமத்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விளையாடிக்கொண்டிருந்த இருவரும் குட்டைக்குள் குளிக்க தண்ணீரில் இறங்கியதாக தெரிகிறது.

சேறும் சகதியுமாக ஆள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் குளிக்கச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இறந்த மாணவிகளின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குளம், குட்டை, ஆறு, ஏரிகளில் யாரும் எக்காரணத்தை கொண்டும் குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். நேற்று இதேபோன்று கந்திகுப்பம் என்ற இடத்தில் இரண்டு குழந்தைகள் குட்டையில் மூழ்கி இறந்தது. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு, இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம்  வரட்டணபள்ளி அருகே தாண்டவப்பள்ளம் குட்டையில் மூழ்கி காவ்யா வயது 9 ,சுபித்ரா வயது 14 மாணவிகள் இருவர் பலி.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டணபள்ளி அருகே தாண்டவப்பள்ளம் குட்டையில் மூழ்கி காவ்யா வயது 9 ,சுபித்ரா வயது 14 மாணவிகள் இருவர் பலி.
பெரியமட்டாரப்பள்ளி பள்ளியில் படித்து வருகின்றனர் இருவரும். இன்று மதியம் யதேச்சையாக அங்குள்ள
ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குட்டை நீரில் குளிப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளே இறங்கி உள்ளனர் 2 குடிமராமத்து பணி நிகழ்ந்துள்ள இடங்களில் சேறும் சகதியும் மற்றும் நீரும் அதிகமாக இருந்ததால் ஆள் மூழ்கும் அளவிற்கு பலமும் இருந்த காரணத்தினால் குளிக்கச் சென்ற இருவரும் அகல்யா இழுக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தனர். வரட்டணப்பள்ளி அருகே உள்ள கந்திகுப்பம் என்ற இடத்தில்
நேற்று ஏற்கனவே இரண்டு குழந்தைகள் குட்டையில் மூழ்கி இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குளம் குட்டை ஆறு ஏரிகளில் யாரும் எக்காரணத்தை கொண்டும் குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டாம் என்று அறிக்கைவிட்டு இருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு இரண்டு குழந்தைகள் ஒரே சம்பவத்தால் தொடர்ந்து இழந்ததால் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.