ETV Bharat / state

சிலிண்டரை சரியாக அணைக்காததால் தீ விபத்து! - காட்டிநாயக்கன்தொட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததால் வீட்டில் இருந்த மூவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலிண்டர் கசிவால் சேதமான வீடு
சிலிண்டர் கசிவால் சேதமான வீடு
author img

By

Published : Jun 14, 2020, 7:45 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்(55) ராஜம்மா(50) தம்பதியினர். இவர்கள் நேற்று (ஜூன் 13) இரவு உணவு சமைத்த பிறகு சிலிண்டரை அணைக்க மறந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு அனைவரும் உறங்கிய நிலையில் சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் வீடு முழுவதும் தீ பரவி இருப்பதாக தெரிகிறது.

சிலிண்டர் கசிவால் சேதமான வீடு

இந்நிலையில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர், அவர்களது மகன் முனிராஜ் ஆகியோர் அணிந்திருந்த ஆடைகளிலும் தீ பரவியதால் அலறியடித்து வெளியில் வந்தனர்.

இந்த சத்தம் கேட்ட கிராம மக்கள் தீக்காயங்களுடன் இருந்த மூவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அவர்களது வீட்டில் உள்ள பொருள்கள், ஆடைகள் உள்ளிட்டவை சேதமாகின.

இதையும் படிங்க:'தீ'யால் பரவிய ஹெலிகாப்டர் வதந்தி; நடவடிக்கை நிச்சயம் என ஆட்சியர் உறுதி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.