கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ளது ஜோகிரிபாளையம் கிராமம். இங்கு 70க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து விவசாய நிலங்களில் தண்ணீர் எடுத்து வரும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்து பெண்கள் காலி குடங்களுடன் பேரிகை - சூளகிரி மாநில நெடுஞ்சாலையிலுள்ள புலியர்ச்சி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: