ETV Bharat / state

ஆசிரியையின் பணி மாறுதலுக்கு எதிராக கிராம மக்கள் போர்கொடி!

author img

By

Published : Jun 5, 2019, 7:31 AM IST

கிருஷ்ணகிரி: எ.புதூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய ஆசிரியரை நியமித்த பின்பே, அதில் பணியாற்றும் ஆசிரியை பணி மாறுதல் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கல்வி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

எ.புதூர் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ளது எ.புதூர். இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான முதல்நாள் வகுப்பு இன்று தொடங்கியது.

இந்நிலையில் அந்தப் பள்ளியில் பணியாற்றிவந்த சுமதி என்கிற ஆசிரியை தற்போது சாக்கலப்பள்ளி கிராமத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கு புதிய ஆசிரியரை நியமித்துவிட்டு அவரை மாற்றக்கோரி எ.புதூர் கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பணி மாறுதலுக்கு எதிராக கிராம மக்கள் போர்கொடி

அந்த மனுவில் பள்ளிக்கு அந்த ஆசிரியரை நியமிக்காத பட்சத்தில் 71 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை பெற்று தனியார் பள்ளிகளில் இணைவதை தவிர வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்    அருகே, ஆசிரியரை நியமித்த பின்பாகவே பணி மாறுதல் செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர், கல்வி அதிகாரியிடம் மனு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து  அஞ்செட்டி அருகே உள்ளது எ.புதூர் கிராமம் இந்த கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 71 மாணவர்களுக்கும் சுமதி என்கிற ஒரே ஆசிரியை பாடம் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கல்வி  ஆண்டிற்கான முதல் நாள் வகுப்புக்கள் இன்று தொடங்கிய நிலையில், சுமதி என்கிற ஆசிரியை தற்போது சாக்கலப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

பள்ளிக்கு மாற்று ஆசிரியரை நியமிக்கமால் சுமதி ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என தெரிவித்து எ.புதூர் கிராம மக்களுடன் மாணவர்களின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் புதிய ஆசிரியை பணியில் இணைந்த பிறகு, பணியிட மாற்றுதல் செய்ய வேண்டும், ஆசிரியை நியமிக்காத பட்சத்தில் 71மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை பெற்று தனியார் பள்ளிகளில் இணைவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.