கிருஷ்ணகிரி செயின்ட் லூயிஸ் தனியார் மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் சார்பில், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான கே.பி. முனுசாமி திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மிகவும் தைரியத்துடன் செயல்படவேண்டும்.
கிருஷ்ணகிரியில் மருத்துவர்கள் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை முகாம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: குப்பையில் முளைத்த கொலு பொம்மைகள் - வியக்க வைக்கும் இளைஞர்!