ETV Bharat / state

’என்னை மாற்றுத்திறனாளி என அடையாளப்படுத்திவிடுங்கள்’ - இருத்தலுக்காகப் போராடும் பெண்! - அரசின் உதவி கோரும் மாற்றுத்திறனாளி பெண்

கிருஷ்ணகிரி: ரேணுகா தேவியின் விவாகரத்து வழக்கு வாய்தாவிற்கு கூட அவருடைய கணவர் வரவில்லை. ஏற்கனவே ரேணுகா குடும்பம் வறுமையில் இருந்த நிலையில், கரோனா காலம் மேலும் பொருளாதார நெருக்கடியைக் கொடுத்தது. எந்தவித கைத்தொழிலும் இல்லாமல் மிகுந்த வறுமையில் அவதியுறும் ரேணுகாவின் குடும்பம் ஒரு கட்டத்தில் அயலார் வீட்டில் இரவல் வாங்கி சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டனர் என்பது வேதனையின் உச்சம்...

இருத்தலுக்காகப் போராடும் ஏழைக் கைம்பெண்!

author img

By

Published : Jul 28, 2020, 7:12 PM IST

Updated : Jul 29, 2020, 11:36 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் சாந்தி, ஜெயராமன் தம்பதியினருக்கு பாலாஜி என்ற மகனும், ரேணுகா தேவி (28) என்ற மகளும் உள்ளனர். கால்களை தரையில் இழுத்துக்கொண்டு நகரும் ரேணுகாவிற்கு, தனித்து செயல்படுவது கடினம். இவர் அமர்ந்த இடத்திலேயே செய்யும் வேலைகளை செய்தபடி தன் நாள்களைக் கடத்தி வருகிறார். பிறவியிலேயே இந்த குறைபாடு இருந்தாலும் பரவாயில்லை, எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் ரேணுகாவின் வாழ்க்கை போராட்டக் களமாக மாறியுள்ளது.

இவர் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்தார் உதவியுடன் தனது இருத்தலுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பிறரை சார்ந்து வாழ விரும்பாத ரேணுகாவின் கடந்த காலம் குறித்து கேட்டோம். அவர் கூறுகையில், “கடந்த 2012ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராசு என்பவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. மின்வாரியத் துறையில் பணிபுரிவதாகக் கூறி அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவருடைய குடும்பத்தினரும் என்னை மிகவும் துன்புறுத்தினர். பின்னர், எனக்கிருந்த வயிற்று வலியை காரணம் காட்டி எனது பெற்றோரிடமே என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இப்போது எனது பெற்றோர் என்னை பராமரித்து வருகின்றனர்.

எனது தந்தை தனியார் மருத்துவமனையில் காவலராக பணியாற்றிவருகிறார். சொற்ப வருமானத்தில் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது பாரமாயிருக்கிறது. தம்பியின் வருமானம்தான் குடும்பத்தைத் தாங்குகிறது. எனது கணவரிடம் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் வழக்கில் பெரிதும் முன்னேற்றமில்லை” என்றார்.

கசந்து போன திருமண வாழ்க்கையுடன் தவிக்கும் ரேணுகாவைக் குறித்து அவரது தாயார் கூறுகையில், “ திடீரென ஒரு நாள் ரேணுகாவின் கை, கால்களில் இயக்கம் இல்லாமல் போனது, எதனால் என்றே எங்களுக்கு புரியவில்லை. உடலில் நரம்பு சார்ந்த பிரச்னை என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறிவிட்டனர். தனியாரிடம் சென்று சிகிச்சை பெற எங்களிடம் போதிய பண வசதியில்லை. அரசுதான் உதவ வேண்டும்” என்றார்.

மழைக்கு ஒழுகும் ஒரு சிறிய ஓட்டு வீடு மட்டும்தான் தங்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கும் ரேணுகா, கணவனைப் பிரிந்து வந்த பிறகு புளியம்பழத்தை மாசை நீக்கி தரும் பணியை செய்து வந்தார். கணவரை பிரிந்து வந்த ஏழு மாதங்களுக்கு பிறகு எப்போதும் போல விடியற்காலையில் ரேணுகா விழித்துள்ளார். வழக்கம்போல எழுந்திருக்க முயன்ற அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை.

இது குறித்து ரேணுகா கூறுகையில், “பழையப்பேட்டைக்கு அருகாமையிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று சோதித்தபோது என்னால் இனி நடக்கவே முடியாது எனக் கூறிவிட்டனர். ஆனாலும் உயர் சிகிச்சை மையங்களுக்கு விரைந்தோம். சேலம் மற்றும் பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் எனப்படும் மத்திய அரசின் உளவியல் மற்றும் நரம்பியல் துறைக்கான சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறச் சென்றேன். அங்கு எனது முதுகுத்தண்டுவடத்தில் திரவங்களை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, இனி நடக்க வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்” என்கிறார் கனத்த இதயத்துடன்.

இருத்தலுக்காகப் போராடும் ஏழைக் கைம்பெண்!

இது குறித்து ரேணுகா தேவியின் முன்னாள் கணவர் கோவிந்தராசுவின் தங்கையை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஒரு தரப்பு தீர்ப்பின்படி எனது அண்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரேணுகாவை அவரது பெற்றோர் மணமுடித்து கொடுக்கும்போது, அவர் வளர்ச்சியடையாமலும், பருவமெய்தாமலும் இருந்தார்” என்றார்.

ரேணுகாவின் சகோதரன் மெக்கானிக் கடையில் சிறு உதவியாளர் பணியில் ஈடுபட்டு மிகக் குறைந்த அளவில் தொகையை கொடுக்கிறார். கணவனால் கைவிடப்பட்ட ரேணுகா தற்போது தம்பியின் உழைப்பைதான் நம்பியுள்ளார். இந்த நிலை மாற அரசு உதவ வேண்டும் என்பதே அவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.

மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை

ரேணுகாவின் கால்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக செயலிழந்து போனது. இதனைக் கருத்தில் கொண்டு முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி என சான்று அளித்து தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாதாமாதம் உதவி வழங்கினால் உதவியாக இருக்கும். உதவித்தொகை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தான் செய்யத் தகுந்த வேலையாவது அரசு கொடுக்க வேண்டும் என ரேணுகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து திரும்பினேன் ஆனால் வீடு திரும்ப முடியவில்லை… மகனால் பரிதவிக்கும் தாய்

Last Updated : Jul 29, 2020, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.