கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா தக்க்ஷன திருப்பதி திருக்கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதாசி திருவிழா நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள், அலங்கார வழிபாடுகள்கள் நடைபெற்றன.
புத்தாண்டு அனைவருக்கும் நன்மைதரும் ஆண்டாகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இறைவனை வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ஓசூர், சூளகிரி, காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு இறைவனை வேண்டிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை - பக்தர்கள் உற்சாக வழிபாடு