ETV Bharat / state

விளைச்சல் குறைவால் செண்டுமல்லி பூ விலை உயர்வு - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் செண்டு மல்லி பூ விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செண்டுமல்லி பூ விலை உயர்வு
author img

By

Published : May 21, 2019, 10:16 PM IST

ஓசூர், பாகலூர், பத்தக்கோட்ட, குந்துமாரனபள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு ராகி, சோளம், நெல், அவரை, துவரை, கேரட், பிட்ரூட் பல்வேறு காய்கறிகள் மற்றும் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, பட்டன் ரோஜா உள்ளிட்ட பூக்களையும் பயிரிடுகின்றனர். ஓசூர் தாலுகாவில் 500 ஏக்கருக்கும் மேல் செண்டு மல்லி பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போதிய தண்ணீரின்றி பல தோட்டங்களில் பயிரிட்ட செண்டு மல்லி காய்ந்து விட்டதால் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்கள் வரத்து வெகுவாக குறைந்ததால், செண்டுமல்லி பூவின் விலை உயர்ந்துள்ளது.

விளைச்சல் குறைவால் செண்டுமல்லி பூ விலை உயர்வு

பெங்களுர், மைசூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செண்டு மல்லி பூக்களை விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு செண்டுமல்லி பூ கிலோ ரூ.5 முதல் ரு.10 வரை விற்பனையானது. முகூர்த்த நாட்கள் என்பதால் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கி செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் விளைச்சல் குறைவால் செண்டுமல்லி பூ விலை உயர்வு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் செண்டு மல்லி பூ விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஓசூர்,பாகலூர்,பத்தக்கோட்ட,குந்துமாரனபள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ராகி, சோளம், நெல், அவரை, துவரை, கேரட், பிட்ரூட், முள்ளங்கி, சுரைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, பட்டன் ரோஜா உள்ளிட்ட பூக்களையும் பயிரிடுகின்றனர். 

தற்போது முகூர்த்த நாட்கள் என்பதால் செண்டு மல்லி பூ விலை உயர்ந்துள்ளது. ஆனால் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 500 ஏக்கருக்கும் மேல் செண்டு மல்லி பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீரின்றி பல தோட்டங்களில் பயிரிட்ட செண்டு மல்லி காய்ந்து விட்டன. இதனால் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூ விளைச்சல் எதிர்பார்ப்பை விட குறைந்துள்ளது. பூக்கள் விளைச்சல் குறைவால், விலை அதிகரித்துள்ளது. 

தற்போது பெங்களுர், மைசூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செண்டு மல்லி பூக்களை விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். செண்டு மல்லி ஒரு வாரம் வரை வைத்திருந்தாலும் பூக்கள் வாடாது என்தால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ₹5 முதல் ₹10 வரை தான் விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ₹90 முதல் 100 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.