ETV Bharat / state

கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பிய சிறுவர்கள் கைது! - School students arrested for spreading gang rape and spreading it on WhatsApp!

கிருஷ்ணகிரி : குருபரப்பள்ளி அருகே பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, அதனைக் காணொலி எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பிய மாணவர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வாட்ஸ்ஆப்பில் பரப்பிய பள்ளி மாணவர்கள் கைது!

author img

By

Published : Sep 28, 2020, 12:12 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள பேட்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, சக மாணவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து காணொலி எடுத்து வாட்ஸ்அப்பில் அதனை பரப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் அம்மாணவியை. கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஊருக்கு வெளியே அழைத்து, மாணவர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்து, செல்போன் மூலம் படம் பிடித்தும் உள்ளனர்.

மேலும், அக்காணொலியை தங்களது சக நண்பரான ஒன்பதாம் வகுப்பு மாணவருடனும் மற்றும் பலருக்கும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளனர். இதை அறிந்த சிறுமியின் தந்தை, குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இத்தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நிபந்தனை பிணை உத்தரவை மீறி கொலை; குற்றவாளிக்கு பிறப்பித்த ஆணை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.