கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், ரஜினியின் 70ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திவைத்தார்.
பின்னர் ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம், சலவைப் பெட்டி, பச்சிளங்குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் உள்ளிட்ட முந்நூறு பேருக்கான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ”நிச்சயம் ரஜினியால் தமிழ்நாட்டு வெற்றிடத்தை நிரப்ப முடியும். மக்கள் பலமும் ஆசீர்வாதமும் அவருக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இவர்போல் இனி யாரும் பிறக்கமாட்டார்கள்” என்றார்.
ரஜினி, கமல் இணைவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்த நேரத்தில் இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'ரசிகர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கை வீண் போகாது' - ரஜினிகாந்த்