கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள நல்லுர் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா (65). இவருக்கு தானம்மா என்ற மனைவி, ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
வெங்கடப்பா தனக்கு சொந்தமான ஆடுகளை கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்று வருவது வழக்கம். அதேபோல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்றுள்ளார்.
இதனைதொடர்ந்து வனப்பகுதிக்குச் சென்ற அவர் உடலில் வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்துள்ளார். பின்னர், இதையறிந்த அவரது உறவினர்கள் உடலை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த நபர்களைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிங்க: 'இளைஞர் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை'