கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப் பட்டினத்தில் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டினம் காமராஜர் சிலை அருகில் இருந்து கண்டன பேரணி தொடங்கியது.
இதில் கங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வண்டிகளை கயறு கட்டி இழுத்தவாறு பேரணியில் கலந்து கொண்டனர். பின்னர், காவேரிப்பட்டினம் நகரின் முக்கிய சாலை வழியாக வந்த இவர்கள் பேருந்து நிலையத்தில், இருசக்கர வாகனங்களுக்கு இறுதிச் சடங்கு செய்து மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போதிலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதைக் கண்டித்தும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கும் வகையில் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக குறைக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'என் பாடல் வரிகளை மாற்றி எனக்கே அனுப்புகின்றனர்' - வைரமுத்து