கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள், பிற மாவட்டங்களுக்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தினை பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பொது மக்கள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளி மாநிலத்திலிருந்தோ, வெளி மாவட்டத்திலிருந்தோ, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிபவர்கள், அத்தியாவசியமான மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக இம்மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தை அண்டை வீட்டார்கள், பொது மக்கள் உடனடியாக 04343 - 230044, 04343- 234444, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றார்.