தமிழ்நாட்டு ஊரடங்கில் புதிய தளர்வுகளால் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இ-பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழ்நாடு மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் தமிழ்நாடு வரும் கர்நாடக வாகனங்களை காவலர்கள், வருவாய் அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய வாகனங்களை தவிர்த்து, மற்ற வாகனங்கள் இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இ-பதிவு இல்லாத வாகனங்களை அலுவலர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சிலர் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்த வாய்ப்பிருப்பதால், மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.