தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தினைச் சேர்ந்தவர் மும்பையில் பணி செய்து வருகிறார். இவர் தமிழ்நாட்டுக்கு வரும் பொருட்டு தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுகாதரத் துறையினர் அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் இருந்து வந்ததால் சிகிச்சை ஏற்பாடு விதிகளின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் இவர் இருமாநில தொடர்பு பெற்றிருப்பதால் மகாராஷ்டிர மாநில கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!