கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் தலை துண்டான நிலையில் ரயில்வே காவல் துறை அவரின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். தற்கொலை செய்துகொண்டு முதியவர் யார் என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
கோயம்புத்தூரிலிருந்து மும்பை சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் (11014) இரண்டரை மணியளவில் ஓசூர் ரயில்வே நிலையத்திற்கு வந்து மீண்டும் புறப்பட்டது. அப்போது சில மீட்டர்கள் தூரத்திலேயே ஒருவர் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததாகவும் ரயிலை நிறுத்த முடியாததால் படுத்திருந்தவர் மீது ரயில் ஏறி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் ரயிலை இயக்கிய ஓட்டுநர் ஓசூர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து வந்த ஓசூர் ரயில்வே காவல் துறையினர், உயிரிழந்தவர் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் என்றும் தற்கொலை செய்துகொண்டிருப்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு தற்கொலை செய்துகொண்ட முதியவர் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் உள்ளிட்ட விவரங்கள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கடலூரில் காவல் துணைஆய்வாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை!