கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை அமைத்துள்ளது. முதல்கட்டமாக ஆண்டுக்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் வகையில் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தின் முன்பதிவு கடந்த ஜூலை 16ஆம் தேதி தொடங்கி, 24 மணி நேரத்திற்குள், சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்தச் தொழிற்சாலையானது முழுமையாக பெண்களால் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை நிர்வாக அலுவலர் பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலை முழுக்க பெண்களால் நடத்தப்படும். இது உலகின் மிகப்பெரிய பெண்கள் தொழிற்சாலையாக இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: '24 மணி நேரத்தில் ஒரு லட்சம் புக்கிங்' - ஓஹோ விற்பனையில் ஓலா!