கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த இராயக்கோட்டை அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமாரன்(35). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
சுகுமாரனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ய திட்டமிட்ட முருகன், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சுகுமாரனின் தாயார் செய்திருந்து பூரி மாவில் அரளிவிதையை அரைத்து கலந்து வைத்துள்ளார்.
இதனை சுகுமாரனின் 7 வயது மகன் ஜீவானந்தம், 4 வயது மகள் பூஜா, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முதியவர் முனியப்பா ஆகியோர் சாப்பிட்டு மூன்று பேரும் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை கைது செய்த இராயக்கோட்டை காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர். வழக்கின் விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அசோகன் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: 'எனக்கு நீதி வேண்டும்'- நீதிமன்றத்தில் மயங்கிய அக்ஷய் சிங் மனைவி!