ETV Bharat / state

பாஜகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் - கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி : பல்வேறு கட்சிகளிலிருத்து வெளியேறி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்தனர்.

More than 100 youngsters have joined the BJP in Krishnagiri

author img

By

Published : Aug 13, 2020, 7:17 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஆக. 13) கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி தொழிற்பேட்டை, ராசி தொழில் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில செய்தித் தொடர்பாளருமான நரசிம்மன் முன்னிலையில் அனைவரும் பாஜகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு முன்னாள் எம்.பி நரசிம்மன் சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது அக்கட்சியின் பல்வேறு பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.