கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த காமாட்சி தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து சமரசம் ஆன காமாட்சி மூன்று மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவி, உறங்கி கொண்டியிருந்த தனது மனைவியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து,ரவி சிங்காரபேட்டை காவல்நிலையத்திற்கு வந்து சரணைடந்துள்ளார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று காமாட்சியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரவி தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து கழுத்தறுத்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.