கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீர்ஜேப்பள்ளி, சானமாவு, காமன்தொட்டி, ஏனுசோனை, மாதர்சனப்பள்ளி, ஊலட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள் முறையான கால்வாய்கள் இன்றியும் மழைப்பெய்யாததால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஏரிகளை முறையாக தூர்வாரி மழைநீரை சேமிக்கும் வகையில் "ஜல் சக்தி அபியான்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஏரிகளை தூர்வாரும் பணிகளை பூமி பூஜைகள் செய்து தொடங்கிவைத்தார். மேலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடக்க விழா சூளகிரியில் நடைபெற்றது.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கியுள்ள நிலையில் நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு-வருகின்றன.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட 25 ஏரிகளை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறினார்.