அரசுப் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்புச் சங்கங்களின் சார்பில் கிருஷ்ணகிரி நகரப் பணிமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288 ஏ-வைக் கைவிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து தனியார் முறையை புகுத்தக்கூடாது, போக்குவரத்துக் கழகங்களை ஒழுங்குப்படுத்தி நிதி வழங்க வேண்டும், தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது அவர்களின் பணப்பலன்களை வருடாந்திர முறையில் நிறுத்திவைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தை இயக்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது!