கிருஷ்ணகிரி மாவட்டம், பெங்களூரு சாலையில் தனியாருக்குச் சொந்தமான மளிகைப்பொருள்கள் விற்பனை செய்யும் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இன்று காலை ஐந்து மணியளவில் திடீரென வணிக வளாகத்தில் தீ பிடித்தது.
இதைக்கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயணைப்பு மீட்பு படையினரின் துரித நடவடிக்கையால் பெரும் பொருள்சேதம் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளதாக வணிக வாளகத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கருகி நாசம்