ETV Bharat / state

சத்யபிரதா சாகு உள்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! - IAS OFFICERS TRANSFER

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சத்யபிரதா சாகு, தலைமைச் செயலகம்
சத்யபிரதா சாகு, தலைமைச் செயலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 7:46 PM IST

சென்னை : தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ஆணையராக இருந்த சத்திய மூர்த்தி மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனராக இருந்த சில்பா பிரபாகர் சதிஷ் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகத்தின் இயக்குனராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முதன்மை செயலாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு கால்நடை, பால்வளம் மீன்வளம், மீனவர் நலத்துறையினர் முதன்மை செயலாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனராக இருந்த ஆர்த்தி துணை முதல்வர் அலுவலகத்தில் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனராகவும் கூடுதலாக செயல்படுவார்.

மாநில சுகாதரத்துறை திட்ட இயக்குனராக இருந்த அருண்தம்புராஜ் தேசிய சுகாதாரத்துறையின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநில சுகாதரத்துறை திட்ட இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.