ஐதராபாத்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் இன்று (நவ.11) வரை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் சர்வதேச மற்றும் இந்தியா அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையான ரூ.70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இப்போட்டி 7 சுற்றுகளைக் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்பட்டது.
Big congratulations to GM @pawnof64squares on winning the Chennai Grand Masters 2024. Aravindh defeated Levon Aronian in the tie breaks with a score of 2-0 to clinch the title! #CGM2024 #ChennaiGrandMasters pic.twitter.com/HtyDSPuxEE
— Chennai Grand Masters (@Chennai_GM) November 11, 2024
இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் ஆரோனியன் உட்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்கு பெற்றனர். இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக 15 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த வெற்றி குறித்து பேசிய அரவிந்த் சிதம்பரம், "இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியில் என்னுடன் மோதிய அர்ஜூன் எரிகைரி கடும் சவால் அளித்தார். செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. அடுத்ததாக கத்தாரில் நடைபெற உள்ள போட்டியில் கலந்துகொள்ள உள்ளேன்" என்று தெரிவித்தார்.
Challengers winner @GM_Pranav_V @tatasteelchess - spot in next year's Challengers please? pic.twitter.com/2zIt95HN6r
— Chess Numbers India (@chess_insights) November 11, 2024
அதேபோல் சேலஞ்சர்ஸ் பிரிவில் விளையாடிய பெங்களூருவை சேர்ந்த வி.பிரணவ், இறுதிப் போட்டியில் கோவாவை சேர்ந்த லியோன் லூக் மென்டோன்கா என்பவரை எதிர்கொண்டார். ஆட்டம் விறுவிறுப்பாக சென்ற நிலையில் இறுதியில் டிராவில் முடிந்தது. இருப்பினும், தரவரிசைப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்ததை அடுத்து பிரணவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரணவ் அடுத்த ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில் விளையாட உயர்வு பெற்றார். மேலும் அவருக்கு தமிழக அரசு தரப்பில் 6 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: "Fanboy Moment": விஸ்வநாதன் ஆனந்துடன் ஃபேன் பாய் அஸ்வின் எடுத்து கொண்ட படம் வைரல்!