ETV Bharat / state

சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்- பீலா ராஜேஷ் - கிருஷ்ணகிரி கணிப்பாய்வு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி:சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

beela rajesh பீலா ராஜேஷ்
author img

By

Published : Oct 3, 2019, 7:59 PM IST

Updated : Oct 3, 2019, 8:31 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்," தமிழ்நாட்டில் வரவுள்ள மழைக்காலங்களில் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 35 இடங்கள் மழையால் அதிக சேதத்திற்குள்ளாகும் என்று கருதப்படுகிறது. அவ்வாறு கருதப்படும் இடங்களில் பேரிடர் மேலாண்மைகுழுக்கள் தயார் நிலையில் இருக்கவும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட கணிப்பாய்வு பீலா ராஜேஷ் உரை

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவுக்கு மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஏற்படுத்த வேண்டும்.

பருவமழைக்காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுகளை முடிந்த வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் " என்றார்.

பின்னர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு தனி அறைகள் ஏற்படுத்தி கொசுவலைகள் உடன் படுக்கை வசதி, உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும் - ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட கணிப் பாய்வு அலுவலர் திருமதி. பீலா ராஜேஷ் தகவல்Body:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் திருமதி பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் வர உள்ள மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 35 இடங்களில் மழை பாதிப்பால் சேதம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த இடங்களில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் இருத்தல். 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை செயல்படுவது, அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பது. வெள்ளப் பாதிப்பு குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய அளவுக்கு மருந்துகள், மாத்திரைகள் சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுகளிலும் ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக போதிய சிகிச்சையை பெற வேண்டும். மழைக் காலங்களில் தண்ணீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் அடிப்படை பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் இணைந்து தீர்க்க வேண்டும். பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், டெங்கு மலேரியா போன்ற தொற்று நோய்களை போதிய அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, மலேசியா போன்ற பாதிப்புகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு தனி அறைகள் ஏற்படுத்தி,கொசுவலைகள் உடன் படுக்கை வசதி, உரிய சிகிச்சை வழங்க வேண்டும். குறிப்பாக முழுமையாக குணம் அடைந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சியர் பிரபாகர், உட்பட பலர் இருந்தனர்.Conclusion:
Last Updated : Oct 3, 2019, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.