குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுபெற்றுவருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரியில் சுமார் 30 ஜமாத் அமைப்புகள் இணைந்து கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.
முன்னதாக கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட கண்டனப் பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு வந்தடைந்தது. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் சுமார் மூன்றாயிரம் பெண்கள் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கிருஷ்ணகிரியில் பேருந்துகள் மாற்று வழியில் அனுப்பப்பட்டதுடன் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: என்னது 'போரணி'யா - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!