கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி கேஆர்பி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களிலிருந்து விநாடிக்கு 180 கனஅடி வீதம் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி இன்று(டிசம்பர்-14) திறந்து விட்டார். இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஹள்ளி, தளிஅள்ளி, கால்வே அள்ளி, குண்டலபட்டி, மிட்டஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டினம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, ஜனப்பரஅள்ளி, நாகோஜன அள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளை சேர்ந்த 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.