தமிழ்நாடு முதலமைச்சர் 2020-21 ஆண்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்காக பொதுப் பணித்துறை மூலமாக 11 சிறப்பு பணிகளுக்கு ரூ.5.63 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளார்.
இம்மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய், ரூ. 2 கோடியே 75 லட்சத்திலும், தேன்கனிக்கோட்டை வட்டம் கடவரஹள்ளி அணைகட்டில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கி உள்ளார்கள்.
தற்போது இப்பணிகள் அனைத்தும் பாசனதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கால்வாயில் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயின் உள்பகுதியில் படிந்துள்ள மண்ணை தூர்வாருதல், அரிப்பு ஏற்பட்டுள்ள பாதையில் மண்கொட்டி கரைகளை சரி செய்தல், கால்வாயின் நேரடி பாசன மதகுகளை சீரமைத்தல், அரிப்பு ஏற்பட்டுள்ள கால்வாய் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 11 சிறப்பு பணிகளுக்கு ரூ.5.63 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுவுள்ள அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்து பணிகளும் இரண்டு மாதங்களுக்குள் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கெலவரப்பள்ளி அணையில் புனரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மிக துரிதமாகவும், சிறப்பாகவும் பணிகளை செய்து முடிப்பதற்காக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்கு பின் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சென்னை!