ETV Bharat / state

கைகளில் பிடிக்கமுடியாத அளவிற்கான மழலைகளின் விருதுகளும் அவர்களது சாதனைகளும் - tamil news

கிருஷ்ணகிரி: சிறு வயதில் உலக சாதனை படைத்த இரண்டு சிறுவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்துச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கிப் பாராட்டினார்.

விருதுகள்
விருதுகள்
author img

By

Published : Mar 3, 2020, 6:37 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 3ஆம் வகுப்பு பயிலும் மாணவன் சிவமணி, 2ஆம் வகுப்பு பயிலும் மாணவன் நவதீப் ஆகியோர் சென்னையில் நடைபெற்ற டிரம்ஸ் ஆஃப் ரெக்கார்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதில், சிவமணி 4 நிமிடம் 3 விநாடிகளில் 101 திருக்குறள்களையும், நவதீப் 1 நிமிடம் 3 விநாடிகளில் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளின் பெயர்களை கூறியும் உலக சாதனைப் படைத்துள்ளனர்.

இவர்களது சாதனை முந்தைய சாதனையாளர்களைவிட இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த இளம் சிறார்களுக்கு அரசு சார்பில் கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவர்களை கௌரவிக்கும் விதமாக ஆட்சியர் பிரபாகர் மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கிப் பாராட்டுகள் தெரிவித்தனர்.

கைகளில் பிடிக்க முடியாத அளவிற்கான மழலைகளின் விருதுகளும் அவர்களது சாதனைகளும்

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,"அரசுப்பள்ளியில் பயிலும் எங்களது பிள்ளைகளை ஆசிரியர்கள் ஊக்குவித்ததின் காரணமாகவே தான், இந்த சாதனையை செய்ய முடிந்தது" என்றனர்.

இதையும் படிங்க: 'எங்களை எப்படியாவது காப்பாத்துங்க' - ஈரானில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.