ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக முதற்கட்ட தேர்தலானது டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சத்து 43,528 பெண்கள், ஒரு கோடியே 28 லட்சத்து 25,778 ஆண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 1,635 பேர் என மொத்தம் இரண்டு கோடியே 58 லட்சத்து 70,941 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதனையொட்டி, 27 மாவட்டங்களிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை அலுவலர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!