கரோனா தொற்று பரவல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகவில் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயம், கட்டுமானப்பணி, உற்பத்தி தொழிற்சாலையை தவிர்த்து மற்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது .
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது காரணமாக, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஓசூா் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெங்களுரு செல்லமுடியாமல் மீண்டும் சொந்த ஊா்களுக்கு திரும்பும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் இல்லாமல் 50 உள்நாட்டு விமானங்கள் ரத்து