தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் பள்ளி ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கான இரண்டு நாள் உண்டு, உறைவிட பயிற்சி குருகுலம் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் ரெட் கிராஸ் அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம், வரலாறு, அடிப்படைக் கொள்கை ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன.
மேலும் விபத்து மற்றும் தீ தடுப்பு, முதலுதவி அளித்தல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய பயிற்சிகள் பற்றி மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தேசிய கருத்தாளர்கள் லாரன்ஸ், ஜேஆர்சி மாநில பயிற்றுனர் தண்டபாணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த நிகழ்வை தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்தராஜா ஒருங்கிணைத்தார். இதில் 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...தமிழ்நாடு பட்ஜெட் நிகழ்வுகள் உடனுக்குடன்.! உள்ளங்கையில்..!