கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள ஒன்னுப்பள்ளி கிராமத்தில் 13 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமத்திலுள்ள பொதுமக்கள் வெளியே செல்லவும், வெளிநபர்கள் கிராமத்திற்கு உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளை வருவாய்த் துறை அலுவலர்கள் நிறைவேற்றிவருகின்றனர். தொடர்ந்து அந்த கிராமம் சுகாதாரத் துறை அலுவலர்களின் கண்காணிப்பில் உள்ளது.