ETV Bharat / state

ஏரியை சொந்த செலவில் செப்பனிட முயன்ற மக்கள் - தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள்! - ஓசூர் அருகே ஆக்கிரிமிக்கப்பட்ட ஏரி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை கிராம மக்கள் இணைந்து செப்பனிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூரில் ஏரியை சொந்த செலகில் செப்பனிட்ட மக்கள்!

author img

By

Published : Jul 17, 2020, 8:58 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஜம்புகான் கொடிகேரி ஏரி உள்ளது. இந்த ஏரிதான், இந்தப்பகுதியில் உள்ள எட்டு கிராமங்களுக்கும் பாசன வசதிக்காக இருந்துள்ளது.

அப்படி, இருக்கும்பட்சத்தில் இந்த ஏரிக்கரைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், உரியமுறையில் பராமரிக்கப்படாமலும் முட்புதர்கள் ஆக்கிரமித்துக் காணப்பட்டது. அதுமட்டுமின்றி, ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் பகுதி, பழுது ஏற்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பராமரிப்பின்றியும் இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில், சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்குப் புகார் அளித்தும்; இந்த ஏரி தங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனக்கூறி; அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதி மக்கள் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறைகளுக்கும் ஏரியை தூர்வாரிச் செப்பனிட கோரிக்கை மனுக்கள் பலமுறை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியைத் தூர்வார அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் ஒன்றுகூடி, பணம் போட்டு, தாங்களாகவே களமிறங்கி டிராக்டர், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கினார்கள்.

ஏரியை சொந்த செலவில் செப்பனிட முயன்ற மக்கள்!

இந்த தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் சென்று விசாரணை மேற்கொண்டு, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது ஏரியை செப்பனிட கோரிக்கை வைத்த பொழுதெல்லாம், ஒவ்வொரு துறை அலுவலர்களும் இது தங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறி தட்டிக்கழித்து, வந்தது பொதுமக்கள் சார்பில் விளக்கப்பட்டது.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் ஏரி சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், இது கெலமங்கலம் ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி விவசாயிகளையும் பொதுமக்களையும் சமாதானப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து இந்த ஏரியை உடனடியாக உரிய முறையில் தூர்வாரி, தூய்மைப்படுத்தி, செப்பனிட்டு பராமரிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அலுவலர்கள், உறுதியளித்தனர். இதையடுத்து அக்கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க...'பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும்' இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.