ETV Bharat / state

ஓசூர் வளர்ச்சிக்கு அரசு செய்ய வேண்டியது என்ன? - சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பின் கோரிக்கை!

author img

By

Published : Mar 21, 2023, 7:26 AM IST

தமிழக நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு சிந்தனையுடன் அனைவருக்குமானதாக உள்ளது என தெரிவித்த ஓசூர் சிறு - குறு நடுத்தர தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன், தமிழக அரசு ஓசூர் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முன்னெடுப்புகளை பட்டியலிட்டுள்ளார்.

Hosur trade union leader requested to start the Hosur trade fair this year
ஓசூர் வர்த்தக கண்காட்சியை இந்த ஆண்டே துவங்க வெண்டுமென தொழிற்சங்க தலைவர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள சிறு - குறு, நடுத்தர தொழிற்சங்க கூட்டமைப்பு அலுவலகத்தில் அதன் தலைவர் (HOSTIA) வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொலைநோக்கான அனைவருக்குமான நிதிநிலை பட்ஜெட்டாக உள்ளதை வரவேற்கிறோம். தொழில்துறைக்குச் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்குப் பல எண்ணற்ற அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் சுமார் ரூ.1,509 கோடி, அதாவது கடந்த நிதியாண்டை விட சுமார் ரூ.600 கோடி அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு மூலதன மானியம் சுமார் 40% வரை 6% வட்டி மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் தொழில் துறைக்கு ரூ 3,268 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இரண்டு அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் திறன் மேம்பாட்டு மையம் என்கிற அறிவிப்பால் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் திறன்மிகுந்த தொழிலாளர்களைப் பெற முடியும். ஒசூர், கோவை, சென்னை 3 மாநகரங்களில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம் கொண்டு வந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

நிதியமைச்சர் ஓசூரை 3 வது பெரிய தொழில்நகரமாக முக்கியத்துவம் அளித்துள்ளார். குறிப்பாக தொழிற்சாலைகளில் எதிர்கால பணியாளர் தேவையை கருத்தில் கொண்டு தொழில் நுட்ப கல்வி பயிலும் ஐடிஐ, பாலிடெக்னிக் இன்ஜினியரிங் போன்ற மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதற்கு இண்டஸ்ட்ரி 4.0, திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு உலக அளவில் இந்த நடைமுறைதான் உற்பத்தித் துறையில் கடைப்பிடிக்கப்படும், ஒரு சிறந்த முறையாகும். இந்த முறையில் மாணவர்களும் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பல ’சென்டர் ஆப் எக்ஸ்லெண்ட்’ தமிழ்நாட்டில் உருவாக்க அறிவித்துள்ளார்கள்” என்றார்.

மேலும் அவர் ஓசூர் பகுதிக்குச் செய்ய வேண்டியவை குறித்தும் கோரிக்கை வைத்தார். அதில், “ஓசூருக்கு உலகத்தரம் வாய்ந்த வர்த்தக கண்காட்சி இந்தாண்டே நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட வேண்டும். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஓசூரில் வடக்கு உள்வட்ட சாலை அமைக்க வேண்டும். 10,000 குறைந்த விலையில் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்கள் அமைக்க வேண்டும்.

1.50 லட்சம் சந்தாதாரர்களை கொண்ட ஓசூர் ESI மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், மேலும் விமான நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ நிலையங்களுக்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். விரைவான வளர்ச்சியில் மாவட்ட அளவில் வளர்ச்சி ஆணையம், அடிப்படை கட்டமைப்பை துரிதப்படுத்தி இவற்றை செய்தால் ஓசூரில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயில் புதிய முதலீட்டை ஈர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.